ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி - விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்
அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்பதால், தேர்தலை எளிதில் எதிர்கொள்ள பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் நாடு முழுவதும் 26 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். சுமார் 4 லட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், இதற்கான திட்டங்களை விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும்,
மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் புதுடெல்லியில் விவசாயிகள், பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story