தாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெங்களூரு ஜேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஜீவன் என்ற இளைஞர் புகை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். மகனின் தீய பழக்கங்கள் குறித்து அவரது தாய், கல்லூரி நிர்வாகத்திடம் கூறி மகனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவன் தனது தாயை துடைப்பத்தால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி பரவியதை தொடர்ந்து, ஜீவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
Next Story