"8 மரணங்களில் ஒரு மரணம் காற்று மாசால் நிகழ்கிறது" - "இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்

நாட்டில், காற்று மாசு காரணமாக எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்து வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
8 மரணங்களில் ஒரு மரணம் காற்று மாசால் நிகழ்கிறது - இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்
x
நாட்டில், காற்று மாசு காரணமாக எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்து வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விட காற்று மாசினால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மருத்துவ கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. காற்று மாசால், மனிதர்களின் ஆயுட்காலம் ஒரு வருடத்திற்கு குறைவதாகவும், நாட்டில் வாழும் மொத்த மக்கள் தொகையில், சுமார் 77 சதவீத மக்கள் காற்று மாசால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசால், கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியாவில், காற்று மாசால் ஆண்டு தோறும் சுமார் 26 சதவீத மக்கள் உயிரிழப்பதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்