புதிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவியேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவியேற்பு
x
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த சுனில் அரோராவை, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், சுனில் அரோரா தலைமையில் நடைபெறும். இதுபோல, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆந்திரா, காஷ்மீர், அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் அரோரா தலைமையில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 65 வயது வரை பணியில் இருக்கலாம் என்பதால், இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி வகிப்பார்.

Next Story

மேலும் செய்திகள்