ஆபத்தை ஏற்படுத்தும் ஆச்சரிய "நில்லு நில்லு சவால்" : வாகனங்களை மறித்து கும்பலாக நடனம்

கன மழை பாதிப்பில் இருந்து, மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் கேரள மாநிலத்தை, தற்போது புரட்டிப் போட்டு வரும் ஒரு சவால் குறித்து விளக்குகிறது.
ஆபத்தை ஏற்படுத்தும் ஆச்சரிய நில்லு நில்லு சவால் : வாகனங்களை மறித்து கும்பலாக நடனம்
x
இதற்குப் பெயர் தான் "Nillu Nillu challenge..." கேரள மாநில காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த சவால். பொது மக்களும், வாகன ஓட்டிகளும், இதனால் பீதி அடைந்து வருகின்றனர். "ஐஸ் பக்கெட் சேலஞ்ச் - ஃபிட்னஸ் சேலஞ்ச்'' என்று  ஜனரஞ்சகமாக இல்லாமல், சில மாதங்களுக்கு முன்னர், மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ''கிகி சேலஞ்ச்'' இணையத்தில் பிரபலமானது. ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடிய படியே முன்னேற வேண்டும் என்ற சவாலுக்கு பலரும் களமிறங்கினர்.

'இந்த நடனத்தால் விபத்து ஏற்படும் என்பதால், யாரும் கிகி சேலஞ்ச்சில் ஈடுபட வேண்டாம்' என காவல்துறையினர் எச்சரித்தனர். அதனையும் மீறி, கிகி சேலஞ்ச் மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்தனர். இந்த நிலையில் தான், கேரளாவில் 'நில்லு நில்லு சேலஞ்ச்' பிரபலமாகி வருகிறது. 

கடந்த 2004-ஆம் ஆண்டு, "Rain Rain Come Again" என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் 'நில்லு நில்லு' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி, 14 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த பாடல் பிரபலமாகி வருகிறது. இப்பாடலுக்கு தான், கேரள மக்கள் 'நில்லு நில்லு சேலஞ்ச்' மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, வாகனத்தில் செல்பவர்களை இடையில் மறிக்கும் நான்கைந்து பேர் கொண்ட கும்பல், அவர்களின் முன்னால் 'நில்லு நில்லு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். கையில் இலைகள் அல்லது தலையில் ஹெல்மெட்டை அணிந்தபடி அவர்கள் நடனமாடுகின்றனர். தனியாகச் செல்பவர்களையும் விட்டு வைப்பதில்லை...

நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன், தமது படத்திற்காக மற்றொரு நடிகருடன் இணைந்து இதுபோன்று நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைத் தொடர்ந்தே இந்த சவால் பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற விபரீதத்தில் ஈடுபட வேண்டாம் என கேரள காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வீடியோ மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்