சபரிமலைக்கு காட்டு வழியில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, காட்டுப்பாதையில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பக்தர்கள் சிலர் பம்பை வழியாகவும், சிலர் புல்மேடு வழியிலான 12 கிலோ மீட்டர் காட்டுப்பாதையிலும் செல்கின்றனர். இந்த காட்டுப்பாதையை மகர விளக்கின் போது வரும் பக்தர்கள் அதிகம் பயன்படுத்துவர். இந்தப் பாதையில் தினமும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கடந்தாண்டு நடை திறக்கப்பட்ட 13 நாட்களில் ஆயிரத்து 557 பக்தர்கள் காட்டுப் பாதையில் சென்றனர். ஆனால், நடப்பாண்டில் இதுவரை 919 பக்தர்கள் மட்டுமே இந்த வழியை பயன்படுத்தியுள்ளனர். கோயிலுக்கு பம்பை வழியாக செல்வதே எளிது என பக்தர்கள் கூறினாலும், பெண்களை அனுமதிக்கும் உத்தரவிற்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தியதால் வனப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதாகவும், அதனால் பலர் அந்த வழியை தவிர்ப்பதாகவும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story