"தீவிரவாதத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை கிடையாது" - சுஷ்மா சுவராஜ்
தீவிரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், கர்தார்ப்பூர் சாலை வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு தொடங்கும் என எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடத்த முடியாது என்று கூறிய சுஷ்மா, தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை அந்நாட்டுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்றார். இதனால் அந்நாட்டில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story