மத்திய பிரதேசம், மிசோரமில் சட்டப்பேரவைத் தேர்தல் - பாதுகாப்பு பணிகளில் 1.80 லட்சம் பேர்
மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை, தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. சட்டீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பகல் ஒரு மணி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் 31 சதவிகிதமும் மிசோரமில் 49 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1 லட்சத்து 80 ஆயிரம் பேர், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த இரண்டு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Next Story