2022 க்குள் அனைவருக்கும் சொந்த வீடு - பிரதமர் நரேந்திரமோடி உறுதி
2022 ம் ஆண்டுக்குள் - அதாவது இன்னும் 4 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு நிச்சயம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
2022 ம் ஆண்டுக்குள் - அதாவது இன்னும் 4 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு நிச்சயம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் 75 - வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, இது சாத்தியமாகும் என்றார். 55 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால், மின்சாரம், குடிநீர், சாலைகள், கழிப்பிட வசதிகள் கிராமங்களை சென்று சேரவில்லை என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வருகிற டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.
Next Story