நடிகர் அம்பரீஷின் உடல் இன்று மாலை நல்லடக்கம்
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.
பிரபல கன்னட நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது சொந்த ஊரான மாண்டியாவில் இருந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக அம்பரீஷன் உடல் பெங்களூரு கொண்டுவரப்பட்டது.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டூடியோவில் இன்று மாலை 4 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி ஊர்வலத்தில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்வதால், சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Next Story