அயோத்தியில் இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி : 2 லட்சம் பேர் திரண்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது.
அயோத்தியில் இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி : 2 லட்சம் பேர் திரண்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு
x
அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி விஸ்வ இந்து அமைப்பு சார்பில் அயோத்தியில் இன்று பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்கள் ஏராளமானோர் அயோத்தியில் திரண்டுள்ளனர். கரசேவர்களும் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர். இதேபோல் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் அயோத்தி சென்றுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள், 62 எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றுள்ளனர்.  இதனால் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவ படையினர், கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்