ராமாயண் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்...
ராமாயணத்தில் வரும் பல்வேறு பகுதிகளை, ஒரே பயணத்தில் பார்க்கும் வகையில், 'ராமாயண் எக்ஸ்பிரஸ்' என்ற புதிய சுற்றுலா ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், கொடியசைத்து ரயில் இயக்கத்தை துவக்கி வைத்தார். டெல்லியில் இருந்து கிளம்பும் ராமாயன் எக்ஸ்பிரஸ்,16 நாட்கள் தொடர் பயணத்தின் முடிவில் ராமேஸ்வரத்திற்கு வந்தடையும். 16 நாட்களில், அயோத்தி, நந்தி கிராம், சீதாமர்கி, ஜானக்பூர், வாரனாசி, பிரயாக், நாசிக், ஹம்பி உள்ளிட்ட ராமாயண கதைக் களங்களை கடந்து ராமேஸ்வரத்தில் பயணம் நிறைவு பெறுகிறது. இந்த ரயிலில் சுமார் 800 பேர் பயணித்து வருகின்றனர். பயணிகளுக்கு உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல, சுற்றிக் காண்பிப்பதற்காக ரயில்வே சார்பில் சிறப்பு அதிகாரிகளும் பயணம் செய்கின்றனர். ராமாயண கதைக்களங்களில் இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, சென்னையில் இருந்து என பிரத்யேக விமான பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story