ஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு
கடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.
* ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு, வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதமே, இந்த பனிப்பொழிவு தொடங்கிவிட்டது.
* 2009-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில், இந்த ஆண்டு அதிகமாக பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக, மூடப்பட்ட ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, சீரமைப்பிற்குப் பின்னர் ஒரு வழிப்பாதையாக திறக்கப்பட்டது.
* ஜவஹர் டனல், காசிகுந்த், பனிஹால் ராம்பன் பகுதிகளில் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல், முகல் சாலை மற்றும் ரஜவ்ரிக்கு இடையேயான சாலைகளையும் சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
* பருவம் தவறிப் பெய்யும் இந்த பனிப் பொழிவால், காஷ்மீர் ஆப்பிள் மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவால், ஆப்பிள் விவசாயிகள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளனர். பனியால் மூழ்கிய ஆப்பிள் மரங்களைக் கண்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
* உத்தராகண்டிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு முழுவதும் பெய்கின்ற பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஹிமாச்சல பிரதேசம் மணாலியில் 2 புள்ளி 8 டிகிரி செல்சியசாக இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 13 ஆயிரத்து 50 அடி உயரத்தில் உள்ள ரோடங்கிலும் சிம்லாவிலும் 21 புள்ளி 2 சென்டி மீட்டர் அளவிற்கு பனி படர்ந்துள்ளது.
* சுற்றுலாவாசிகள் பனிப்பொழிவை ரசித்தாலும், உள்ளூர் மக்களும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்...
Next Story