கேதர்நாத்தில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி
தீபாவளியைக் கொண்டாட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் டேராடூன் வந்தடைந்த அவர் அங்கிருந்து கேதர்நத் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மோடி கலந்து கொண்டார். பின்னர் ஹர்சில் பகுதியில், பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடினார். கேதர்நாத் பகுதியில் இருந்த உள்ளூர் மக்களையும், மோடி சந்தித்து பேசினார். மோடியின் வருகையையொட்டி, கேதர்நாத் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story