அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டம் : 3,01,152 விளக்குகள் ஒளியில் ஜொலித்தது சரயு நதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரை விளக்கொளியில் ஜொலித்தது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், அம்மாநில அரசு சார்பில், தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவில், தென்கொரிய அதிபரின் மனைவி KIM JUNG SOOK சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதையொட்டி, ராமாயண காவியத்தை விளக்கும் வகையில், ராமர், லட்சுமணன், சீதா வேடமணிந்து வந்து கலைஞர்கள் அசத்தினர். விழாவின் நிறைவாக, சரயு நதிக்கரையில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்ட்டது. இதனால், சரயு நதிக்கரை மற்றும் அயோத்தி நகரம், விளக்கொளியில் ஜொலித்தது. மேலும், இதிகாசங்களை விளக்கும் லேசர் தொழில்நுட்ப காட்சிகளும் சரயு நதியில் திரையிடப்பட்டன.
Next Story