ஐ.என்.எஸ் அரிஹந்த் - கூடுதல் தகவல்
* அரிஹந்த் என்கிற சமஸ்கிருத, சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள் ஆகும்.
* அரிஹந்த் என்கிற சமஸ்கிருத, சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள் ஆகும்.
* இந்த நீர்மூழ்கி கப்பலின், முதல் வெள்ளோட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் துவங்கப்பட்டது.
* முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய், செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
* 112 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் எதிரியின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் நீண்ட காலம் கடலுக்குள்ளேயே இருக்கும் திறன் படைத்ததாகும்.
* இக்கப்பல் கடலுக்குள் இருந்தபடி எதிரியின் இலக்கை குறி பார்த்து ஒரே நேரத்தில் 12 பாலிஸ்டிக் ஏவுகணைகளை நாலாபுறமும் செலுத்த முடியும்.
* கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலமாக இந்திய பெருங்கடலில் இருக்கும் எந்தவொரு இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும்.
* சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லைக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வலிமை இந்த ஏவுகணைக்கு உண்டு.
* முன்னதாக தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் சோதனையை, ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர் மூழ்கி கப்பல் வெற்றிகரமாக சோதித்தது.
* இந்த வலிமை கொண்ட கப்பல்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது.
* இதே வகையை சேர்ந்த ரோந்து கப்பல்களை சீனா கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வருகிறது.
* ஆனால், அதன் சோதனை இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story