நாளை சபரிமலை நடைதிறப்பு - 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு
சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
கடைசி மன்னரின் பிறந்தநாளையொட்டி வருடம்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 6ம் தேதி இரவு நடை சாத்தப்படுகிறது.
இதனையடுத்து 2 ஆயிரம் போலீசார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் வரும் 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story