அக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்

அக்டோபர் மாதத்தில் மட்டும், ஜிஎஸ்டி வரி 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்
x
அக்டோபர் மாதம் ஒரு லட்சத்து 710 கோடி வரி சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளதாகவும் செப்டம்பர் மாத இறுதி வரை 67 லட்சத்து 45 ஆயிரம் பேர் வரிதாக்கல் செய்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் வரிவசூல் செய்ததை விட 6 புள்ளி 6 சதவீதம் அதிகமாகும். பண்டிகை கால விற்பனை அதிகரி்ப்பே வரி வசூல் உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது சமூக வலைதள பக்கத்தில் அக்டோபர் மாதம் மட்டும், ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்