ஜி.எஸ்.டி. கவுன்சிலின் செயல்பாடுகள்

சரக்கு மற்றும் சேவை வரிகளை நிர்ணயிக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் செயல்பாடுகள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் செயல்பாடுகள்
x
சரக்கு மற்றும் சேவை வரிகளை நிர்ணயிக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலில், மத்திய நிதி அமைச்சரின் தலைமையில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். மத்திய அரசின் வருவாய் துறை செயலாளர், இந்த கவுன்சிலின் செயலாளராக செயல்படுகிறார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் உருவாக்கப்பட்டதில் இருந்து இது வரை  30 முறை கூட்டம் கூட்டப்பட்டு 913 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 96 சதவீத முடிவுகள், 294 அறிவிப்புகள் மூலம் இதுவரை நிறைவேற்றப் பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் முன்பாக, கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் பற்றிய விரிவான குறிப்பு தயாரிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதுவரை நடந்த 30 கூட்டங்களுக்குமான குறிப்புகள், மொத்தம் 1394 பக்கங்கள் சேர்ந்துள்ளன.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சில், மத்திய மாநில உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. மறைமுக வரி விதிப்பின் முக்கிய அம்சங்களை, மத்திய மாநில அரசுகள் சேர்ந்து முடிவு செய்யும் முறை, அதிகார பரவலாக்கலை சாத்தியமாக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்