"ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம்" - பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் எனவும் அவர் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் எனவும் பாராட்டினார்.
படேல் சிலையை திறந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் எனவும் அவர் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் எனவும் பாராட்டினார். எதுவும் நடக்காது, முடியாது என பலர் கூறிய போதிலும் உறுதியாக இருந்து இந்தியாவை படேல் ஒருங்கிணைத்ததாகவும் மோடி தெரிவித்தார். படேல் சிலையை திறந்து வைக்கும் கவுரவம் கிடைத்ததில் பெருமைப்படுவதாகவும், அனைத்து இந்தியர்களுக்குமான வரலாற்று தருணம், இது எனவும் குறிப்பிட்டடார். தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியதாகவும், படேல் சிலையை அமைப்பதற்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் விவசாய கருவிகளின் இரும்பை தந்து ஆதரவளித்ததாகவும் கூறினார்.
படேல் சிலையை பார்வையிட்டார், பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததும், விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலமாக, சிலை மீது பூக்கள் தூவப்பட்டன. திறப்பு விழாவை தொடர்ந்து, சிலையை மோடி பார்வையிட்டார். சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள பூங்கா உள்ளிட்டவற்றை அவர் பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ருபானி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் சிலையை பார்த்தனர். அப்போது, கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story