"இந்தியாவில் ரூ. 18,350 கோடி முதலீடு செய்ய ஜப்பான் திட்டம்" - பிரதமர் நரேந்திர மோடி

பாதுகாப்பு, சுகாதாரம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என இந்தியாவும், ஜப்பானும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரூ. 18,350 கோடி முதலீடு செய்ய ஜப்பான் திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி
x
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் சுமார் 18 ஆயிரத்து 350 கோடி ரூபாய் முதலீடு செய்யபோவதாக ஜப்பான் முதலீட்டாளர்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியாவும், ஜப்பானும் தீர்மானித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்