சி.பி.ஐ. இயக்குநர் மீதான குற்றச்சாட்டு : 2 வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

​சி.பி.ஐ. இயக்குநர் மீதான குற்றச்சாட்டை, 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ. இயக்குநர் மீதான குற்றச்சாட்டு : 2 வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
x
சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ​புகாரில், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரங்களை பறித்து, கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அவர் இயக்குநராக தொடர்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்த நிலையிலும், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அலோக் வர்மா மீதான, ராஜேஷ் அஸ்தானாவின் குற்றச்சாட்டு, குறித்து 2 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு, உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரிப்பார் என்றும் தலைமை நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார். அடுத்த விசாரணை வ​ரையில், சி.பி.ஐ. தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவ், வழக்கமான பணிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்றும், கொள்கை முடிவு ஏதுவும் எடுக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஏதேனும் கொள்கை முடிவு எடுத்திருந்தால், அதுகுறித்து மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையமும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.​ 


Next Story

மேலும் செய்திகள்