யார் இந்த ரெஹானா பாத்திமா? ...
சபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா, கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.
* சபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா,
கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.
* சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் பெண் பத்திரிகையாளர் கவிதாவும் கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமாவும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.
* கேரளா மாநிலத்தில் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வரும் ரெஹானா பாத்திமா, மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
* பெண்களின் உடல் அமைப்பை வர்ணித்து பேராசிரியர் தெரிவித்த ஆபாசமான கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ரெஹானா நூதன போராட்டத்தை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
* கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்திலும் பங்கேற்று பரபரப்பு கிளப்பியவர் இந்த ரெஹானா.
* சபரிமலை தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே மாலை அணிந்து நெற்றியில் விபூதி பூசிய நிலையில் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
* இன்று ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு சென்ற நிலையில் எர்ணாகுளத்தில் இருந்த அவரது வீட்டை மர்மநபர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.
* தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ரெஹானா தெரிவித்து இருக்கிறார். இருந்தபோதிலும் சபரிமலைக்குள் செல்வது பெண்களின் உரிமையே என்பதில் திடமாக இருக்கிறார் ரெஹானா.
Next Story