"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ரவீஷ்குமார்
இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே, ஏற்கனவே, சுமுகமான வலுவான உறவு இருந்து வருவதாகவும், அவர் தெரிவித்தார். ஹெச்.ஒன்.பி. விசா தொடர்பான பிரச்சனைகளை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஈரானுக்கு, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பாம்ப்பியோ கூறியிருப்பதாகவும் ரவீஷ்குமார் கூறினார். ஃபிரான்ஸ் உடனான உறவு வலுவாக இருப்பதாகவும் அது மேலும் வலுப்பெறும் என்றும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் குறிப்பிட்டார். தங்கள் மண்ணில் இருந்து இயக்கப்படும் தீவிரவாத குழுக்கள் மீது உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், அவர் தெரிவித்தார்.
Next Story