இயற்கை சீற்றங்களால் இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு - ஐநா சபை

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
இயற்கை சீற்றங்களால் இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு - ஐநா சபை
x
* கடந்த 20 ஆண்டுகளில்  ஏற்பட்ட, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட  இயற்கை சீற்றங்கள் குறித்து, ஐநாவின் பேரிடர் தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

* அதில், உலகளவில் மொத்தமாக ஏழாயிரத்து 255 இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றால் 43 சதவீத வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பேரிடர்களால், பொருளாதார பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் 5 இடங்களுக்குள் இருப்பது, ஐநா அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.  

* கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 87 சதவீத பாதிப்புகள், அரசிடம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால், இந்த தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. 

* வெள்ளம் காரணமாக, இந்தியாவில் மட்டும், ஆண்டு தோறும், ஆயிரத்து 600 பேர் உயிரிழப்பதாகவும், ஆயிரத்து 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்