கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு : கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல், மீது குருவிளங்காடு கான்வென்ட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில், பிராங்கோ கைது செய்யப்பட்டு, கோட்டயம் மாவட்டம் பலாவில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன் வழங்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பிராங்கோ மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Next Story