"இந்தியாவை மிரட்டினால் பாகிஸ்தான் துண்டிக்கப்படும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தால், உலகத்தின் தொடர்பில் இருந்து பாகிஸ்தான் துணடிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது, சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்வோம் என சிவசேனா மிரட்டி இருப்பது தொடர்பாக பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, அவர்கள் தற்கொலை செய்யட்டும் என்றும், யாரோ தற்கொலை செய்து கொள்வதற்காக, சட்ட விதிமுறைகளை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் விவகாரம் மத்திய அரசால் தீர்த்து வைக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story