#MeToo என்றால் என்ன?...
இணையவாசிகள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது Me too என்ற hash tag.
* #MeToo, சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு hashtag.இணையவாசிகள் பலருக்கும் இந்த hash tag பரிச்சயம். இணையத்தில் இல்லாதவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.
* #MeToo என்பது, "நானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்" என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு வாக்கியம்.
* தங்களை பாலியல் ரீதியாக சீண்டிய ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டம் தான் இந்த #MeToo
* இந்த போராட்டத்தை தொடங்கியவர், Alyssa Milano என்ற அமெரிக்க நடிகை. கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த hash tag இயக்கம், அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியா உடபட பல நாடுகளில் பெரும் புயலைக் கிளப்பியது.
* சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களில், சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர், metoo hash tag-யை பதிவிட்டு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை குறிப்பிடத் தொடங்கினர்.
* இதில் அதிகம், சர்ச்சையில் சிக்கியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தான். இவர் மீது மட்டும் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் விளைவாக, அமெரிக்க போலீஸ் அவரை கைது செய்தது.
* இந்தியாவிலும், இந்த hash tag பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆம் தேதியன்று, பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர், Utsav Chakraborty மீது ஒரு இளம்பெண் புகார் தெரிவித்தார். தொடர்ந்து பல பெண்கள் புகார் தெரிவிக்க, வேறு வழியில்லாமல், Utsav Chakraborty-யும் மன்னிப்பு கேட்டார்.
* இதே போல பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் ராஜத் கபூரும், #Metoo hash tag-ல் சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டனர்.
* பிரபல இந்தி நடிகர் நானா படேக்கர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா, பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அதை நானா படேகர் மறுத்தார்.
* பூஜா பட், கங்கானா ரனாவத் உள்ளிட்ட நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை #MeToo-வில் பகிர்ந்தனர்...
* புண்பட்ட மனங்களுக்கு ஆறுதலையும், தவறு செய்தவர்களுக்கு குற்றவுணர்வையும் தரும், இந்த #Metoo hash tag, தமிழகத்திலும் பரவத் துவங்கி, பல பிரபலங்களின் அடையாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டத் துவங்கியுள்ளது.
Next Story