உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்கியது..

கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று தொடங்கி 19ம் தேதி வரை தசரா விழா நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளான இன்று, சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி பங்கேற்று தசராவை தொடங்கி வைத்தார்.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்கியது..
x
கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று தொடங்கி 19ம் தேதி வரை தசரா விழா நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளான இன்று, சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி பங்கேற்று தசராவை தொடங்கி வைத்தார். மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்ற விழாவில், தசரா ஜோதியை அவர் ஏற்றி வைத்தார். 

10 நாட்கள் நடைபெற உள்ள தசரா விழாவைக் காண, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், 10 நாட்களும் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். தொடக்க விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தசராவுக்கு பிறகு, கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் என கூறினார். சாமுண்டீஸ்வரி அருளால், கர்நாடக மக்களுக்கு தமது அரசு அனைத்தையும் செய்து வருவதாகவும் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு செல்லக் கூடாது எனவும் தெரிவித்தார். மைசூருவில் தசரா விழா தொடங்கிய நிலையில், ராஜ தர்பார் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் மன்னர் யதுவீர் பங்கேற்ற நிகழ்வில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்