ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
x
பிரான்சில் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் 
முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொது நல 
மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது,  பாதுகாப்பு விவகாரம் என்பதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என மத்திய அரசு தரப்பில்  வாதிடப்பட்டது. மனு தாக்கல் செய்த சர்மா என்பவர், 36 போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறினார். இரு தரப்பு விவாதத்தை தொடர்ந்து, ரபேல் ஒப்பந்த நடைமுறை மற்றும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை, வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்