மனித நேயத்தை மேம்படுத்த புது முயற்சி
புதுச்சேரியில் மனித நேயத்தை மேம்படுத்தும் விதமாக ஒரு கோடி ஓவியங்களை தீட்டும் முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் மனித நேயத்தை மேம்படுத்தும் விதமாக ஒரு கோடி ஓவியங்களை தீட்டும் முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். கின்னஸ் சாதனையாளர் ராஜேந்திரன் என்பவரின் தலைமையில், வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று மாதத்திற்கு இந்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணாவிகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஓவியம் தீட்டவுள்ளனர். அவற்றை சேகரித்து கின்னஸ் அமைப்புக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story