குட்டித் தீவுகளை மேம்படுத்தும் பணியில் முகேஷ் எம்.எல்.ஏ...

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஷ்டமுடி காயலில் தீவுகளை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவர திட்டம் வகுத்துள்ளதாக நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் கூறியுள்ளார்.
குட்டித் தீவுகளை மேம்படுத்தும் பணியில் முகேஷ் எம்.எல்.ஏ...
x
கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான முகேஷ் தலைமையில் ஏராளமானோர், அஷ்டமுடி காயலில், தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுஜித கேரளம் என்ற பெயரில் கேரள அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ், குட்டி தீவுகளை சுத்தம் செய்து உள்நாடு, மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தரும் வகையில் மேம்படுத்தப்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்