"11,000 லிட்டர் பீரைக் காணவில்லை எலி குடித்து விட்டது" - பீகார் போலீசார் வாக்குமூலம்
பீகார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த 11 ஆயிரம் பாட்டில் பீரையும் எலி குடித்து விட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
பீகார் மாநில முதலமைச்சராக, நிதிஷ்குமார் பொறுப்பேற்றபின், அங்கு மதுவிலக்கைக் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வந்தார். இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய முயன்றவர்களிடம் இருந்து, மது, பீர் பாட்டில், கேன்களைப் பறிமுதல் செய்து போலீஸார் வைத்திருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்குப் முன்னர், அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தபோது, அந்த மது பாட்டில், பீர் பாட்டில் காலியாகக் கிடந்தன. அனைத்து பீர் கேன்களிலும், சிறிய துளை போடப்பட்டுள்ளது. இந்த பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story