அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் இன்று இந்தியா வந்ததும் எஸ்-400 ஏவுகணைகளை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அரசு முறைப்பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து எஸ்-400 ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஒரே நேரத்தில் 300 இலக்குகளை கண்காணித்து, 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட 36 இலக்குளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணையாகும். இதில் இருந்து, எந்த ரகசிய விமானமும் தப்பிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, ரஷ்யாவுடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
Next Story