எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி நிலுவை : அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி நிலுவை : அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு
x
ஸ்வீடனை சேர்ந்த 'எரிக்சன்' என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அளித்த தொழில் நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளுக்காக சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையால் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, செயலிழந்தது. இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த ஒப்புக் கொண்ட 550 கோடி ரூபாயை கடந்த மாதம் 30ஆம் தேதிக்குள்ளாக ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து, ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன தலைவர் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவன உயரதிகாரிகள் இரண்டு பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரி,  'எரிக்சன்' நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்