கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை - இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...

கேரளா வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை - இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...
x
கேரளாவில் அண்மையில்  கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு மீண்டும் மிக மிக கனமழை பெய்யும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்,  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போல் மூணாரில் உள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன்
அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்