திருமலையில் பக்தர்கள் மனங் கவரும் 'ஆன்மீக மலர்த் தோட்டம்'...

திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக மலர்த் தோட்டம், ஆண்டுதோறும் பக்தர்களை ஈர்த்து விடுகிறது.
திருமலையில் பக்தர்கள் மனங் கவரும் ஆன்மீக மலர்த் தோட்டம்...
x
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருப்பதி திருமலையில் உள்ள பாபவிநாசம் செல்லும் சாலையில் மலர், பழம் மற்றும் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மலர்கள் தோட்டத்தை, 'ஆன்மிக தோட்டம்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். பக்தர்களின் கூற்றுப்படியே, இது, ஆன்மீகம் பூத்துக்குலுங்கும் தோட்டமாகவே காணப்படுகிறது. 

 ஆண்டுதோறும், மலர்த் தோட்ட வடிவமைப்பாளர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து, பக்தர்களை கவர்ந்து இழுத்து விடுகின்றனர். திருமலை வருபவர்கள், மலர்த் தோட்டம் குறித்து பேசும்படி செய்துவிடுகின்றனர். இந்த ஆண்டும், நிறைய புதுமைகள் உள்ளன. இதில், கடவுளின் உருவங்களை ஆங்காங்கே அற்புதமாக வடிவமைத்துள்ளனர். இதிகாச கதைகளைக் கூறும் விதமாக திறந்த வெளியில் கடவுளின் உருவங்களை அருமையாக உருவாக்கியுள்ளனர். 

ஒவ்வொரு வடிவமைப்பிற்கும் கீழே தமிழில் விளக்க குறிப்பு எழுதி வைத்துள்ளனர். இது மலர்த் தோட்டத்திற்கு தமிழர்கள் அதிகம் வருவதினால் கொடுக்கப்பட்ட தனி மதிப்பு. இந்தாண்டு, இரண்டு பிரம்மோற்சவம் என்பதால், இந்த பூங்காவை இரண்டாவது பிரம்மோற்சவத்தின் போதும்  பக்தர்கள், பார்த்து ரசிக்கலாம். அக்டோபர் 10ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரை 2வது பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 


திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌னு‌க்கு, ‌தின‌ந்தோறு‌ம் மல‌ர் அல‌ங்கார‌ம் செ‌ய்ய‌ப்படுவதா‌‌ல், ஏராளமான மல‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறது. இதன‌ா‌ல், ப‌க்த‌ர்க‌ள் மல‌ர்க‌ளை அனு‌ப்பலா‌ம் எ‌ன்று தேவ‌ஸ்தான ‌நி‌‌ர்வாக‌ம் கே‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது. இதனை ஏற்று, பக்தர்களும் மலர்களை அனுப்பி வைத்தவண்ணம் உள்ளனர். அந்த மலர்கள், திருமலை முழுவதும் மணம் வீசிக் கொண்டிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்