மூன்றில் ஒரு பங்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு...
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
* ஏ.டி.ஆர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 83 சட்ட மன்ற உறுப்பினர்களில் ஆயிரத்து 355 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் உள்ள 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அதில் 44 பேர் திமுகவையும், 28 பேர் அதிமுகவையும் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
* அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 63 சதவீத சட்டமன்ற
உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் இது கேரளாவில் 62 சதவீதமாகவும், பிகாரில் 58 சதவீதமாகவும், மகாராஷ்ட்ராவில் 57 சதவீதமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
* மக்களவையில் 179 உறுப்பினர்கள் மீதும் மாநிலங்களவையில் 51 உறுப்பினர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
* இந்த நிலையில், வழக்குகள் முடிந்து, குற்றம் நிருபிக்கபட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கபட்டால் மட்டுமே இவர்கள் பதவி இழப்பை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடதத்தக்கது.
Next Story