திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 8 நாட்களில், சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
x
* திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 8 நாட்களில், சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. 


* இந்த நாட்களில், 5 லட்சத்து 90 ஆயிரத்து 584 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 20 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், ஆர்ஜித சேவை டிக்கெட் விற்பனை மூலம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 442 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்டு உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனை மூலமாக, 4 கோடியே 76 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாகவும், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்