குரலால் கட்டிப் போட்டுள்ள மலை கிராமவாசிகள்....
ஒருவரல்ல... இருவரல்ல... ஒட்டு மொத்த கிராமமே, தமது இசை ஆர்வத்தால், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அதிசயத்தை, விவரிக்கிறது.
* வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள இந்த, இசை கிராமத்தின் பெயர் Kongthong... பச்சைப் பசேல் என்ற மலைப் பகுதிகள், மரத்திலான வீடுகள்... தகரம், கூரை வீடுகளில் வசிக்கும் இயல்பான கிராம மக்கள். Shillong நகரத்தில் இருந்து சுமார் 56 கி.மீ., தூரத்தில் இந்த கிராமம் இருக்கிறது. தேன் சேகரிப்பு தான் இவர்களது பிரதான தொழில்.
* இந்த கிராமத்தினர் அனைவரும் தங்களது சொந்தப் பெயர்களையே மறந்து விட்டனர். ஒருவருக்கொருவர், விசில் அடிப்பது போன்ற, தனித்துவமான குரலிசையால் தான் அழைத்துக் கொள்கின்றனர்.
* எப்போது சென்றாலும், பறவைகளின் குரலோசை ஒலிக்கிறது. ஆனால், அது பறவைகளின் குரலோசை அல்ல... இந்த கிராம மக்களின், இசை ஓசை தான்... விசில் அடிக்கும் சத்தம் போல் கேட்டாலும், ஒருவருக்கொருவர் மாறுபடும் இந்தக் குரல் ஓசை, கேட்போரை மனம் மயங்க வைத்து விடுகிறது.
* மனைவி கேள்வி கேட்கிறார்... கணவர் பதில் தருகிறார்.. தாய், உணவருந்த அழைக்கிறார்... மகன் வருவதாக கூறுகிறார்... இவை எல்லாமே, இசை ஓசை தான்... ஒவ்வொருவருக்கும், இந்த குரல் இசையே, அடையாளமாக இருக்கிறது.
* இந்த இசையை, தங்களது பாரம்பரியமாக, இந்த மலை கிராம மக்கள் கருதுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் இதனையே கற்றுத் தருகின்றனர்.
* இந்த மக்கள், ஒரு தாய்வழி சமூகமாக உள்ளனர். சொத்து மற்றும் நிலம் தாயிடம் இருந்து, மகளுக்குச் செல்கிறது, ஒரு கணவர், தமது மனைவியுடன் சேர்ந்து, அவளது பெயரை எடுத்துக் கொள்கிறார். தாய் தான், குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்... ஆனால், இந்த பெண்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை.
* இவர்கள், Khasi பழங்குடியின மக்கள் என்றழைக்கப்படுகின்றனர்... Khasi மொழியில், ''Jingrwai Iawbei'' என்று, இந்த குரல் இசையை, அழைக்கின்றனர். "The Whistling Village of India", என்று இந்த கிராமம், பிரபலமடைந்துள்ளது.
* ஒவ்வொருவருக்கும் சொந்தப் பெயர்கள் இருந்தாலும், தனித்தனி குரல் இசையால் அழைக்கப்படுகின்றனர்.தமது மகன் மீது கோபம் கொள்ளும் போது மட்டும், பெயரைக் கூறி அழைப்பதாக, இங்குள்ள தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.
* ஆனால், பெயர்கள் ஒலிப்பதில்லை... மாறாக... குரல் இசை தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது, இந்த அழகிய மலை கிராமத்தில்..
Next Story