வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு

பிரம்மோற்சவ விழாவுக்கான கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் இறக்க பிரம்மோற்சவ விழா முழுவதுமாக நிறைவு பெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு
x
திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் தினந்தோறும் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். விழாவின் 9வது நாளான நேற்று காலையில், கோவில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று இரவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.  அதன்பிறகு, பிரம்மோற்சவ விழாவுக்கான கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் இறக்கினர். இதையடுத்து பிரம்மோற்சவ விழா முழுவதுமாக நிறைவு பெற்றது. திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்