கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழக குடும்பம்...

கர்நாடகாவில், தமிழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக நடத்தபட்டு வந்த‌து அம்பலமாகியுள்ளது.
கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழக குடும்பம்...
x
* சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி, என்பவர் கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த நாகேஷ் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடனை திருப்பி தராத‌தால், சின்னத்தம்பியை குடும்பத்துடன் கர்நாடகா அழைத்து சென்ற நாகேஷ், தனது செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக நடத்தியுள்ளார்.  

* நான்கு ஆண்டுகள் வேலை செய்தும் கடன் தீரவில்லை என கூறி தொடர்ந்து துன்புறுத்தி வந்த‌தை தொடர்ந்து, வெங்கடேசன் தனது குடும்பத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னத்தம்பி உயிரிழந்த நிலையில் , ஜானகியை கண்டுபிடித்த நாகேஷ் மீண்டும் வலுக்கட்டாயமாக வேலைக்கு இழுத்து சென்றுள்ளார். 

* இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் எடுத்த‌துடன் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தொழிலதிபர் நாகேசை கைது செய்த போலீசார் , கொத்தடிமையாக இருந்த ஜானகி மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்