கல்குவாரிகளால் கே.ஆர்.எஸ் அணை பலவீனமா ? - ரகசியமாக சீரமைக்கப்பட்டு வருவதாக தகவல்
கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணை கல்குவாரிகளால் பலவீனமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாண்டியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவீந்திரா என்பவர் கே.ஆர். எஸ் அணையின் உறுதி தன்மை குறித்து , கடந்த ஜூலை மாதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அப்பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அவர் புகார் மனு ஒன்றை அனுப்பினார்.
இதனை அடுத்து ஸ்ரீரங்கபட்டணா காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்வந்த தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை நடத்தினார். இதில் கல்குவாரிகளால கே.ஆர். எஸ் அணை பலவீனம் அடைந்து வருவதாக, அப்போதைய காவல் கண்காணிப்பாளர் ராதிகாவிற்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனிக்குழுவை அமைத்து அணையை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகளுக்கு அவர்கள் சீல் வைத்தனர். இருப்பினும் கல்குவாரிகளால் கே.ஆர்.எஸ் அணை சற்று பலவீனம் அடைந்திருப்பதை கண்டறிந்தனர்.
இந்த தகவல் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சப்தமில்லாமல் கே.ஆர்.எஸ் அணை சீரமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Next Story