கேரள கன்னியாஸ்திரி வழக்கு : ஆயர் பிராங்கோ முல்லக்கல் முன்ஜாமீன் மனு 25ம் தேதிக்கு தள்ளி வைப்பு

கேரளா கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பாதிரியார் பிராங்கோவின் முன்ஜாமீன் ​மனு மீதான விசாரணை 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கேரள கன்னியாஸ்திரி வழக்கு : ஆயர் பிராங்கோ முல்லக்கல் முன்ஜாமீன் மனு 25ம் தேதிக்கு தள்ளி வைப்பு
x
பிராங்கோ தம்மை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக  கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த  கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது 75 நாட்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு பிராங்கோவிற்கு கேரள மாநில சிறப்பு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

இதையடுத்து இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அவர் மனுதாக்கல் செய்துள்ளார். கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், தம்மீது இந்த புகார் கூறப்பட்டு உள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 25ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. பிராங்கோ மீதான வழக்கு காரணமாக அவர் வகித்து வந்த ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பொறுப்பு தற்காலிகமாக வேறு ஒரு பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்