தேர்தல் ஆணைய செயல்பாட்டில் காங்கிரஸ் தலையிடக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மனு

தேர்தலை இவ்வாறுதான் நடத்தவேண்டும் என, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி காங்கிரஸ் கட்சி நிர்பந்தம் தரக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் ஆணைய செயல்பாட்டில் காங்கிரஸ் தலையிடக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மனு
x
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கமல்நாத், சச்சின் பைலட் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
அதில், விரைவில் நடைபெறவுள்ள இரு மாநில தேர்தலில், விவிபிஏடி எனும் ஒப்புகை சீட்டு வழங்கும் நேரம் 7 நொடிகளில் இருந்து 15 நொடிகளாக நீட்டிக்கப்பட வேண்டும், வாக்காளர் பட்டியல் உரிய முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.  

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தை நாடி, தேர்தல் ஆணைய செயல்பாட்டில் தலையிடக் கூடாது எனவும், நீதிமன்றம் மூலம் தேர்தல்களை இவ்வாறு தான் நடத்தவேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. 

தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுபோன்ற தலையீடுகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்