2 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 42...

இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
2 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 42...
x
பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் பயணத்திற்கான கவுண்டவுன் நேற்று பிற்பகல் 1.08 மணிக்கு தொடங்கியது. இரவு 10:08 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ச​தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 17 நிமிடம் 44 வினாடிகளில் புவி சுற்றுப்பாதையில் 2 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இஸ்ரோக்கு பிரதமர் வாழ்த்து

2 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 42 இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ​மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின், 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ்.ஏ. ஆர். செயற்கை கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கவும்,  444 கிலோ எடை கொண்ட எஸ் 1 - 4  செயற்கை கோள் பேரழிவு மேலாண்மை, சுற்றுச் சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிக்காகவும் விண்ணில் ஏவப்பட்டது. 

"ஜனவரி 3 - பிப்ரவரி 16-க்குள் சந்திராயன்-2 ஐ செலுத்த திட்டம்"

சந்திராயன் 2 செயற்கைக் கோள் அடுத்தாண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கிலாந்து நிறுவனத்துக்கு சொந்தமான 2 வர்த்தக ​ரீதியான செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு,  புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக  தெரிவித்தார். இந்த வெற்றி இஸ்ரோ வரலாற்றில் முக்கியமான ஒன்று என அவர் குறிப்பிட்டார். வாடிக்கையாளர் நலன் சார்ந்தது பி.எஸ்.எல்.வி. என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளதாகவும் அவர் 
கூறனர். அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் 4 செயற்கைக் கோள்களை செலுத்த முடிவு செய்யப்பட்டு ஒரு செயற்கைக் கோள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய 3 செயற்கைக் கோள்கள் வி​ரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். 2 வாரத்திற்கு ஒரு செயற்கைக் கோளை அனுப்பும் அளவுக்கு பணிகள் உள்ளதாகவும், மூன்றாவது ஏவுதளம் தற்போதைக்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்