பிரதமர் மோடியுடன், அருண் ஜெட்லி சந்திப்பு : பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லியில், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
* டெல்லியில், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவருடன் நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் ஆகியோரும் உடன் இருந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அருண் ஜெட்லி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது என்றார்.
* இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் வெளிப்புற விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அத்தியாவசியமற்ற இறக்குமதி பொருட்களை குறைக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story