வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வரதட்சணை புகார்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் மாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
* வரதட்சணை குறித்த புகார்களில், குற்றம்சாட்டப்பவர்களை உடனடியாக கைது செய்ய கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், வரதட்சணை புகார் தொடர்பாக மாவட்ட வாரியாக குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேணடும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
* இதனை மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்து வந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க தேவையில்லை என கூறி, முந்தைய அமர்வு வழங்கிய தீர்ப்பை மாற்றி உத்தரவிட்டுள்ளது.
Next Story