சாரிடான், டி-கோல்ட் உள்ளிட்ட 327 மாத்திரைகளுக்கு தடை...
வலிநிவாரணியாக பயன்படுத்தப்படும் சாரிடான் உள்ளிட்ட 327 மாத்திரை வகைகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
சாரிடான் மாத்திரை, தோள் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் Panderm என்ற cream, சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் gluconorm மாத்திரை, corex என்ற இருமல் டானிக், ஜலதோஷத்திற்கு பயன்படுத்தப்படும் d-cold மாத்திரை உள்ளிட்டவைகளில், மனித உடலுக்கு கேடு உண்டாக்கும் நச்சுக்கள் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை தடை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இவற்றிற்கு கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே தடைவிதிக்கப்பட்டதும், அதற்கு உச்சநீதிமன்றத்தில் மருந்து நிறுவனங்கள் தடை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Next Story