"நாடு முழுவதும் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு" - மத்திய அரசு கணக்கீட்டில் தகவல்
தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி பருவமழை அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் உள்ள 91 பெரிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகள் இருந்த நீர் அளவின் சராசரியை விட 114 சதவீதம் கூடுதலாகும். இந்த 91 நீர்த்தேக்கங்களில் 37 நீர்த்தேக்கங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின்சார திட்டங்களில் இருந்து
60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகம், ஆந்திரா,கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 31 முக்கிய நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு 82 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நீர்தேக்கங்களின் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 62 சதவீதமாகவே இருந்துள்ளது.
ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு சிறப்பாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் குஜராத்தில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு குறைவாக உள்ளது.
Next Story